மகாமகோபாத்யாயர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சுவாமி நாத ஐயர் அவர்களுக்கும், எனது குருநாதர் சங்கீத கலாநிதி திரு. டி.எம். தியாகராஜன் அவர்களுக்கும், எனது தாத்தா திரு. ச.கு. கணபதி ஐயர் அவர்களுக்கும், என் தகப்பனார் திரு.எஸ்.வி.வரதராஜ ஐயர் அவர்களுக்கும், எனது தாயார் திருமதி. கமலா வரதராஜன் அவர்களுக்கும் உரித்தாகுக.
திருமதி கௌரி கோகுல்
வாழ்த்துரை
"Padmashri Laureatte"
Dr.Sirkali. G. Siva Chidambaram MD,
D.Sc (Hon), FRCP(GI), FMMC
'Isai illam
9, 8th Trust Cross Street,
Mandaivelipakkam,
Chennai-600028, Tamilnadu. INDIA
Ph: 044-24642858, Cell: 98410-72858
Web: www.sirkali.org.
Email: sgsivachidambaram@gmail.com
DEAN/SPL OFFICER (Former), PERAMBALUR GOVT. MEDICAL COLLEGE, PERAMBALUR
'தமிழ் இசை ஒரு கண்ணோட்டம்' என்கிற புத்தகத்தை திருமதி. கௌரி கோகுல் மற்றும் திருமதி. சௌந்தர நாயகி வயிரவன் இருவரும் இணைந்து எழுதி, புத்தகமாகக் கொண்டு வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
இசை முறைகளிலே, தமிழிசை தான் 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிபேசி பாடிய மொழியின்' முன்னோடி இசை. தமிழில் இன்று பாடப்படுவதெல்லாம் தமிழிசை அல்ல. அதற்கென தனித்துவமான வரலாறும் மரபும் கொண்டது நம் தமிழ்இசை!. ஆனால் பலருக்கு இன்றும் தமிழிசையின் தொன்மை பற்றிய தெளிவு அதிகமாக இல்லை. அதற்குக் காரணம் தமிழ் இலக்கியங்கள் எவ்வளவு பழமைவாய்ந்ததோ, அதைப் போலவே தமிழிசையும் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். ஆதியில் இருந்து தமிழிசை, பல பரிமாணங்களில் மரபுமுறையில் வளர்ந்து, தமிழர் வாழ்வு பற்றிய கூறுகளைப் பல நிலைகளில் எடுத்துக் கூறுவதாக விளங்குகிறது.
சங்க காலத்தில் நன்கு வளர்ச்சிஅடைந்த தமிழிசை, சில காரணங்களால் தேக்கநிலை கண்டது. பின்னர் பல்லவர், நாயன்மார் காலங்களில் அதற்குப் புத்துணர்ச்சி கொடுக்கப்பட்டு, கி.பி 6-7ம் நூற்றாண்டு தேவார திருமுறைகள், பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பாடல்களால் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பி ஓங்கி உயர்ந்தது. கி.மு 4ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்காப்பிய இலக்கணச் சான்றுடன், சிலப்பதிகார இலக்கியக் கூற்றுடன் 3-ம் நூற்றாண்டுக்கும் முந்தையபழமையின் ஆதார சான்றுகளோடு, 16-17ம் நூற்றாண்டின் தமிழிசை மூவர் எனப் போற்றப்படுகின்ற முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரின் தெய்வீகப் படைப்புகளால் பல புதிய பரிமாண வடிவங்களைக் கண்டு, பின்னர் தற்காலத்தில் மக்கள் மன்றத்திற்கென, மகாகவி பாரதியார் போன்றோர் தம் வீரம் மிகுந்த, புரட்சிகரமானபாடல்கள் மூலம் பாமர மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ் இசையை வளர்த்தனர்.
தேமதுரத் தமிழ் இசையை முழுமையாக தெருவெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்து, உலகெங்கும் பாடிப் பரப்பி, பண்டிதர் முதல் பாமரர் வரை உணர்த்திய எனதருமைத் தந்தையார் 'இசைமணி' சீர்காழி கோவிந்தராஜன், 'இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன், 'ஏழிசை மன்னர்' எம்.கே.தியாகராஜ பாகவதர், மதுரை மாரியப்ப சுவாமிகள், 'இசை நாடகத் தந்தை' சங்கரதாஸ் சுவாமிகள் போன்றோரின் அயராத இசைப்பணி, தமிழ் இசைக்கு ஏற்றம் தந்தது. செட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியார் - அரசர் முத்தையா, ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டிகேசி ஆகியோர் அமைத்த தமிழிசை இயக்கம் மற்றும் அதன் இசைவிழா-பண்ணாராய்ச்சி மாநாடுகள் தொடர்ந்து அதற்கு புத்துணர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன. கடல் கடந்து வாழும்போதிலும் தன் மொழி கலை, கலாச்சாரம் மறவாமல், நம் தமிழர்கள் வாழ்ந்து வருவது போற்றத்தக்கது. சினிமா பாடல்களும் மேற்கத்திய இசையும் கோலோச்சி இருக்கும் இந்த காலகட்டத்தில் பழமையான 'தமிழ் இசையை' ஆய்வு செய்து எளிய மக்களும் அறியும்வகையில் இந்தப் புத்தகம் வெளிவருவது பாராட்டுக்குறியது.
இப்படிப்பட்ட புத்தகங்கள் வெளிவருவதால் இளைய தலைமுறையினர், தமிழ் மற்றும் தமிழ் இசையின் தொன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவற்றைப் போற்றுவதற்கும் நல்ல வாய்ப்புகிடைக்கும்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ் இசை!
உலகம் வாழ்க!
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!
அன்பன்,
டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம் எம்.டி
தமிழ் இசை என்பதுவே எல்லாவற்றிற்கும் முன்னோடியாகத் திகழ்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பின் வந்த தேவார மூவர், சீர்காழி மூவர் ஆகியவர்கள் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இன்றைய கர்நாடக இசை வளர்ந்ததற்கும் தமிழ் இசையே காரணம். இத்தகையச் சிறப்பு வாய்ந்த தொன்மையான தமிழ் இசை பற்றி சாதாரண மக்களும் அறிய வேண்டும் என்ற எண்ணத்தினால் அடியேன் இதை ஒரு முயற்சியாய் நூல் வடிவத்தில் வெளியிட முற்பட்டேன்.
என் குருநாதர் சங்கீத கலாநிதி ஸ்ரீ டி.எம்.தியாகராஜன் அவர்கள் தமிழ் இசையில் பல அரிய கீர்த்தனைகளைப் புத்தக வடிவில் படைத்துத் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். அவர்
எழுதிய நூல்கள் இசை மலர்க்கொத்து, இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) திருப்பாவை, திரு கோபாலகிருஷ்ண பாரதி பாடல்கள், திரு நீலகண்ட சிவன் பாடல்கள் ஆகியவை ஆகும். எனது இந்த முயற்சிக்கு என் குருநாதரே காரணமாவார். இதில் குற்றம் இருந்தால் நிறைகளை குறைகள் எடுத்துக்கொண்டு குறைகளைச் சுட்டிக் காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் எனது தாய் வழித் தாத்தா ச.கு.கணபதி அவர்கள் மகாமகோபாத்யாயர் டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐபர் (தமிழ்த் தாத்தா] அவர்களின் சீடராவார். எனது தாத்தா அவர்கள் நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவர் கலாக்ஷேத்ராவில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்திருக்கிறார். சர்க்கரை நோயைப் பற்றி ஆராய்ந்து டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். கலைமகள் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
இதற்குச் சிறப்பாக முகவுரை வழங்கிய டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு உறுதுணையாக இருந்து இரவு பகலாக இடையறாது பணி புரிந்து, புத்தகத்திற்குப் பலவிதமான விஷயங்களைச் சேகரிக்கப் பாடுபட்ட என் மாணவி திருமதி சௌந்தர நாயகி வயிரவன் அவர்களுக்கும், ஆங்கிலத்தில் எழுத உதவிய எனது மாணவி டாக்டர் ராதிகா ஜெயதேவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் இசைக்கலையைப் பயிலக் காரணமாக இருந்த எனது தாய்,தந்தையருக்கும், இப்புத்தகத்திற்குச் சில ஆலோசனைகளை வழங்கிய என் சகோதரி திருமதி மல்லிகா ஸ்ரீதரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்மொழி, தமிழிசை.
திருமதி கௌரி கோகுல்
'தமிழ் இசை ஒரு கண்ணோட்டம்" என்ற இந்தப் புத்தகம் 'தமிழ் இசை என்ற ஆழமான தலைப்பைப் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை. காரணம், சாதாரண மனிதர்கள் தமிழ் இசை என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வதற்காக எளிய நடையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.
தமிழ்மொழி எவ்வளவு தொன்மையானதோ, அதைப்போலவே தமிழ் இசையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. இசைகளில் முன்னோடி தமிழ் இசை என்பது சான்றோர் கருத்து.
இன்று பலவிதமான இசை வடிவங்களில், தமிழ் இசை ஒரு சிறு பகுதியாக உள்ளது.
ஆழமான அதிக அர்த்தம் புதைந்து இருக்கும், இந்த தமிழ் இசை மூலம் தமிழ்மொழி, கலாச்சாரம், கலை இவற்றை இளைஞர்களிடம் பரப்ப முயன்றால், நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்குக் கூடுதல் பலன் சேர்க்கமுடியும்.
சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சியடையப் பல நிலைகளிலும் முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகின்றன. அதில் தமிழ் இசையைப் பற்றியும், தமிழ் இசை நிகழ்ச்சிகளை அனைத்துத் தரப்பிலும் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டால் சிங்கப்பூரில் தமிழுக்கு மேலும் எழில் கூட்ட முடியும்.
எனது சங்கீத குருவான திருமதி கௌரி கோகுல் அவர்களுடன் இணைந்து இந்தப் புத்தகம் எழுதியிருப்பது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ் இசை என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதலாம் என்று ஆலோசனை கூறிய திருமதி சுவர்ணா கல்யாண் அவர்களுக்கு என்னுடைய நன்றி. மேலும் இப்புதகத்திற்கு ஆலோசனை வழங்கிய முனைவர் சுப. திண்ணப்பன் அவர்களுக்கும், திரு அ.கி. வரதராஜன் அவர்களுக்கும், முனைவர் சீதா லெட்சுமி அவர்களுக்கும், திருமதி சித்ரா ரமேஷ் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. மேலும் தட்டச்சில் உதவிய திருமதி ஜெயலட்சுமி குருமூர்த்தி அவர்களுக்கும், 'சினிமாவில் சங்கீதம் என்ற தலைப்பில் ஓர் அருமையான கட்டுரையை இந்தப் புத்தகத்திற்கு வழங்கி மேலும் இப்புத்தகம் சிறப்பாக அமைய ஆலோசனைகளை வழங்கிய திரு ஏ.பி. ராமன் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகம் வாசிப்போருக்குத் தமிழ் இசை பற்றி எளிதாக அறிந்துகொள்ள உதவினால், அதுவே இந்தப் புத்தகம் வெளியிட்டதின் வெற்றி!
திருமதி சௌந்தர நாயகி வயிரவன், சிங்கப்பூர்
தமிழ் இசை என்பது, ஆதியில் இருந்தே, தமிழரோடு தொடர்புடையது. பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழர் வாழ்வில் இசை, பின்னிப்பிணைந்தது. அதாவது, தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை, தமிழர் வாழ்வில் இசைக்கு இடம் உண்டு,
தமிழ் இசை பல பரிமாணங்களைக் கொண்டது. அவை, பண்டையப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, எனச் சொல்லப்படுகின்றன.
தமிழிசை கோலோச்சி இருந்த காலமும் உண்டு.தேக்க நிலை கண்ட காலமும் உண்டு.
கிராமிய இசைக் கருவிகள்
கிராமிய இசை என்பது, கிராம மக்கள் தங்களுக்கென்று அமைத்துக்கொண்ட ஒருவகை இசையாகும். இப்பாடல்கள் அனைத்தும் பாமர மக்களும் கேட்டு ரசிக்கும் படி அமைந்துள்ளன.
இவை எளிமையான நடையில் இருந்தாலும்,கருத்துகள் நிறைந்திருக்கும். கிராமியப் பாடல்கள் வாயிலாகக் கிராம மக்களின் கற்பனைத்திறனையும் நகைச்சுவை உணர்வையும், நாம் அறிய முடியும்.
கிராமியப் பாடல்களில் பலவகை உண்டு. அவைகளில் சில:
வேதாந்தப்பாட்டு,பழமொழிப்பாட்டு, பக்கப்பாட்டு நலுங்குப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, ஆரத்திப்பாட்டு, ஊஞ்சல்பாட்டு, சடங்குப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, கும்மி, கோலாட்டப்பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, தெம்மாங்கு,மழைப்பாட்டு, ஆகியவை ஆகும்.
பல்வேறு மெட்டுகளுடன் அமைந்துள்ள இப்பாடல்களில் முக்கியமானவை ஆனந்தக்களிப்பு, சிந்து, ஓடம் அல்லது கப்பல்,லாவணி ஆகியவை ஆகும்.
சிந்துகளில் பல வகைகள் உண்டு. காவடிச் சிந்து, வண்டிச்சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து அவற்றுள் சில.
கிராமியப் பாடல்கள் அனைத்தும், சாதாரண தாளத்திலேயே அமைந்திருக்கும். எல்லா மொழிகளிலும் இப்பாடல்கள் உண்டு. மேலும், ஆனந்த பைரவி, நாதநாமகிரியை, புன்னாகவராளி, நீலாம்பரி, குறிஞ்சி போன்ற ராகங்களிலேயே அநேகமாக அமைந்திருக்கும்.
கிராமியப் பாடல்களுக்கு நாட்டுப்பாடல்கள் என்ற பெயரும் உண்டு. கிராமிய இசைக்கு ஓர் உதாரணம் கீழ் வருமாறு:
'வண்டிக்காரன் தெம்மாங்குப்பாடல்"
பச்சை வண்டி பவள வண்டி பலபேரும் ஏறும் வண்டி
உப்பு புடிச்ச வண்டிலேலேலங்கிடிலேலோ
உடுமலைப்பேட்டை போற
வண்டிலேலேலங்கிடிலேலோ".
தெருக்கூத்துப் பாடல்
(ஓர் எடுத்துக்காட்டு)
முப்பது பணம் குடுத்து மூணு குளம் வெட்டினேன்
இரண்டு குளம் பாழு ஒண்ணு தண்ணியே இல்லே
தண்ணியில்லா குளத்திலே மண்ணு வெட்ட மூணு பேரு
இரண்டு பேரு நொண்டி ஒருத்தன் கையே இல்லே
கையில்லா குசவன் செய்த பானை மூணு பானை
இரண்டு பானை ஓட்டை ஒண்ணு வேகவே இல்லே
வேகாத பானையிலே போட்டரிசி மூணு அரிசி
இரண்டு அரிசி நறுக்கு ஒண்ணு வேகவே இல்லே
வேகாத சோத்துக்கு விருந்தாடி மூணு பேரு
இரண்டு பேரு பட்டினி ஒருத்தன் உண்ணவே இல்லே
பண்டையப் பண் இசை
இவை, பண்களால் அமைக்கப்பட்ட பாடல்களில் காணப்படும் பண் இசை ஆகும்.
செவ்வியல் இசை
செவ்வியல் இசை என்பது, கர்நாடக சங்கீதத்தைக் குறிக்கும்.
பக்தி இசை
இவை இறைவனைக் குறித்துப் பாடும் பாடல்கள் ஆகும்.
திரையிசை
இவை திரைப்படப் பாடல்களைக் குறிக்கும்
இசையின் வளர்ச்சி
மனிதன் உருவான பொழுதே, அவனுடன் சேர்ந்து இசையும் உருவானது. மனிதன் நாகரிக வளர்ச்சியடையும் முன்பு,
காட்டுமிராண்டிகளாகக் காடு மலையில் அலைந்து திரிந்த போதே, தன் களைப்பைப் போக்கிக் கொள்ள தன்
மனநிலைக்கு ஏற்ப ஓசையை எழுப்ப முற்பட்டிருக்கிறான். அந்த ஓசையே இசை வளர்ச்சிக்கு அமைந்த முதல்
நிலை.
பழங்கால மனிதன் வேட்டையாடியும், மீன்பிடித்தும், ஆடு மேய்த்தும், பயிர்த் தொழில் செய்தும் தன்
பசியைப் போக்கிக்கொள்ள முயன்றான். இடையே வாழ்வில் சுவாரஸ்யத்தைத் தேட முயன்ற பொழுது தன் மனதில்
தோன்றியவாறு பாடல்களைப் பாடியதும், இசைக் கருவியை இசைத்ததும், இரண்டாம் நிலை.
விலங்குகள்
நாகரிகம் வளர்ந்தவுடன் பாடல்கள் பாடி, தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்தது, மூன்றாம்
நிலை.
இசைக் கலையின் ஆற்றலையும், மகிமையையும் உணர்ந்த மனிதன், குருகுல வாசம் பெற்று அதை இசை மரபுடன்
பயின்று, அதை தெய்வீகச் சுவையாகப் போற்றியது, நான்காம் நிலை.
தான் கற்ற இசையைக் கற்பனை கூட்டி, அதை மெருகூட்டச் செய்தது, ஐந்தாம் நிலை.
முத்தமிழில் இசைத்தமிழ்
தமிழை இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இயற்றமிழ் 61601
மொழியாகிய மனத்தொடர்புடனும், இசைத்தமிழ் வாக்குத் தொடர்புடனும், நாடகத்தமிழ் மெய்யாகிய உடல்
தொடர்புடனும் சிறப்புறுவதாகப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எடுத்துரைக்கிறார்.
கிட்டத்தட்ட 7099 மொழிகள் இவ்வுலகில் இருப்பதாக நாம் அறிகிறோம். இவற்றில் முந்நூறு மொழிகள் இலக்கண அமைப்புகளுடன் விளங்குகின்றன. அவற்றில், தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், லத்தீன் மற்றும் ஹீப்ரூ மொழிகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.
தென் தமிழகத்திலுள்ள குடுமியான்மலைக் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகக் கூறுகிறது. இருப்பினும் சிலர் தமிழ் மொழி அதற்கு முன்னரே இருப்பதாகக் கருதுகின்றனர். ஆக, திராவிட மொழியான தமிழ் மொழி மிகப் பழமையான மொழி என்று உறுதியாகக் கூறமுடிகிறது.
மேலும், தமிழின் வளர்ச்சி மூன்று காலகட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சங்க காலம், இடைக்காலம், தற்காலம் என்பன. பல ஆராய்ச்சிகளின் மூலம் முதல் சங்க காலம் என்பது கன்னியாகுமரி தொடங்கி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வரை தொடர்ந்தது. இது 'லெமூரியா கண்டம் (Lumaria Continent) (பன்டிதர், 1917, 1984) என்று அழைக்கப்பட்டது. இது கடலுக்குள் மூழ்கிவிட்டதாக அறிகிறோம்.
இரண்டாம் சங்க காலம் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவு. 'இறையனார் களவியல் உரை என்ற நூல் சங்கம் பற்றிய செய்திகளை அறிய உதவி செய்கிறது.
மூன்றாவது சங்க காலம் அல்லது கடைச்சங்கத்தில் தான் தொன்மையான இலக்கண நூல்கள் இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முதல் தமிழ் இலக்கண நூலாகக் கருதப்படும் 'அகத்தியம் இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தற்பொழுது முப்பத்திரண்டு சூத்திரங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.
தற்பொழுது நமக்கு முழுமையாகக் கிடைக்கப்பெற்ற நூலாகக் கருதப்படுவது 'தொல்காப்பியமே' ஆகும். 'தொல்காப்பியம்' எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் மற்றும் பொருளதிகாரத்தை உள்ளடக்கியது.
தமிழ் மொழிக்கு செம்மொழி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இலக்கிய வல்லுநர்கள் ஒரு மொழி ‘செம்மொழி’ என்னும் தகுதியைப் பெறுவதற்கு, அம்மொழி பல தனிச்சிறப்புகளைக் கொண்டு இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அத்தகுதிகள் என்னவெனில் பழமையான மொழி, தனித்துவம், பொதுவான கருத்துக்களைக் கொண்டிருப்பது, மொழிகள் உருவாகக் காரணமாக இருப்பது, கலாச்சார வலிமை, மொழி வளமை, இலக்கணக் கூறுகள், சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் 'தமிழ் மொழிக்கு இருப்பது ஒரு தனிச்சிறப்பு.
கல்வெட்டுகள், செப்பேடுகள், சிற்பங்கள் கூறும் இசைக்குறிப்புகள் சில
திருநெல்வெலி மாவட்டம் கோயில்பட்டி - தளவாய்புரம் செப்பேட்டில் (பராந்தக வீர நாராயணன் காலத்தியது), திருவாரூர் தியாகராச சுவாமி கோயிலில் கிடைக்கும் கல்வெட்டு, தஞ்சை மாவட்டம் கோனேரிராயபுரம் உமாமகேஸ்வர சுவாமி கோவில், குடுமியான்மலை கல்வெட்டு (குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்) முதலியவற்றில் தமிழ் இசைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
முதலாம் வரகுணமன்னன் காலத்திய வேள்விக் குடிச்செப்பேடு சிற்பங்கள் சிலவற்றில் கந்தர்வர், கின்னரர் போன்ற உருவங்கள் பற்றிக் கூறப்படுகிறது. அவற்றின் கையில் ஒருவகை நரம்புக்கருவி வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட குகைக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள், மாமண்டூர் கல்வெட்டு ஆகியவற்றில் தமிழ் இசை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இசையின் அடிப்படை சுரங்களும் தமிழில் அதன் ஒப்பீடும்
தமிழ் மொழியில் இசையின் அடிப்படையான ஏழு சுரங்களையும் பலவற்றோடு ஒப்பிடுகின்றனர்.
| கர்னாடக சுரம் | மேற்கத்திய சுரம் | வர்ணம் | மிருகம் | சக்ரம் |
|---|---|---|---|---|
| ஸ | C | இளம் சிவப்பு | மயில் | மூலாதாரம் |
| ரி | D | பச்சை | பசு / எருது | சுவாதிட்டானம் |
| க | E | ஆரஞ்ச் | ஆடு | மணிபூரகம் |
| ம | F | ஊதா | இராப்பாடி (Nightingale) | அனாகதம் |
| ப | G | சிவப்பு | குயில் | விசுத்தம் |
| த | A | மஞ்சள் | குதிரை | அகினானா |
| நி | B | கருப்பு | யானை | சகஸ்ரம் |
சப்தசுரங்களுக்கு தமிழில் உள்ள பெயர்
| ஏழிசைகள் | சுரங்கள் | எழுத்து |
|---|---|---|
| குரல் | ஷட்ஜம் | ஸ |
| துத்தம் | ரிஷபம் | ரி |
| கைக்கிளை | காந்தாரம் | க |
| உழை | மத்யம்ம் | ம |
| இனி | பஞ்சம்ம் | ப |
| விளரி | தைவதம் | த |
| தாரம் | நிணாதம் | நி |
சுவையோடு ஒப்பீடு
ஏழு சுரங்களை சுவையோடு ஒப்பிடும்போது முறையே பால், தேன், தயிர், நெய், ஏலம், வாழை, மாதுளங்கனி ஆகியவற்றோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
மலர்களுடன் ஒப்பீடு
ஏழு சுரங்களும் மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், பொன்னவிரை, புன்னை ஆகிய மலர்களின் வாசனையோடு ஒப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் சுரங்களுக்கு இணையாகக் கூறப்படும் எழுத்துக்கள்
| தமிழ் எழுத்துக்கள் | சுரம் |
|---|---|
| ஆ | ஸ |
| ஈ, இ | ரி |
| ஊ, உ | க |
| எ, ஏ | ம |
| ஐ | ப |
| ஒ, ஓ | த |
| ஒள | நி |
| ஃ | ஸ் |
இசை என்பது காலத்தைக் கடந்தது. மொழி, இனம், மதம், நாடு, சமுதாயம், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் கடந்து நிற்பது. இசையினால் நன்மைகளும் பயன்களும் உண்டு.
மனிதனுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைக்கும் இசையால் தீர்வு காண முடியும் என்பது பல அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
கள்வரையும் மாற்ற வல்லது இசை
செ. வைத்தியலிங்கய்யர் அவர்களது "தமிழ்ப் பண்பாட்டு வரலாறு" நூலில் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது:
சங்ககாலம் தொட்டே மனக்கோணலை மாற்றும் கொடுமனக்கள்வரின் இயல்பினதாக இசை பயன்பட்டுள்ளது. வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வரும் பாலை நிலத்திலே பாலையாழிசையைக் கேட்டு தம் மனதை மாற்றிக்கொண்டு, தம் சிந்தையைப் பறிகொடுத்து விட்டதாகப் பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது.
ஆறலைக் கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை
என வரும் அடிகளால்
நாம் அதை அறிகிறோம்.
இசையால் பயிர்களை வளர்க்க முடியும்
இசையால் பயிர்களை வளர்க்கலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தாவரவியல் கண்டு பிடித்துள்ளது நமக்கு கிடைத்துள்ள செய்தியாகும். மேலும் சங்க இலக்கியங்களான நற்றிணை, மலைபடுகடாம், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் இசையால் பயிர்களைக் காத்த செய்திகளை நாம் அறிய முடிகிறது.
இசையால் நோய்களைக் குணப்படுத்த முடியும்
உடலில் ஏற்படக்கூடிய எல்லா நோய் மற்றும் மன உளைச்சளையும், இசையால் குணப்படுத்த முடியும் என்பதைப் பல புலவர்கள் தமிழ் நூல்களில் கூறியுள்ளனர்.
போரில் வீழ்ந்துகிடக்கும் வீரனின் மனைவி, பாணர்களை அழைத்து, அவர்களைப் பறவைகளைப் போல ஆரவாரத்துடன் முழங்குமாறு கூறியதை நெடுங்களத்துப் பரணர் என்கிற புலவர் பாடியதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆன்மீக முறையில் 'இராக சிகிச்சை' என்று ஒன்று உண்டு. இசைப்புலமை, யோகமுறை, மனித உடலின் அமைப்பு, பஞ்சபூதத் தத்துவங்களுக்கும் ராகங்களுக்கும் உள்ள தொடர்பு இவை இராக சிகிச்சைக்குத் தேவைப்படும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.
இச்சிகிச்சைகளைச் செய்வோர் பஞ்சபூத அமைப்பு, மனித உடலுக்கும் பஞ்சபூதங்களுக்கும் உள்ள தொடர்பு இவற்றை நாதத்துவ அடிப்படையில் நிர்ணயிக்கக்கூடிய பயிற்சியை சரியாகப் பெற்றிருக்க வேண்டும்.
இராக நுட்பங்களை உடற்கூறு அடிப்படையில் பொருத்தி ஆராய்ந்த தவத்திரு தத்தபீடாதிபதி ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் தம் அனுபவத்தைக் கூறுகையில், "பஞ்ச பூதங்களில் ஆகாயம் எனப்படும் அம்சத்துக்குள்ள கணம் நாத தத்துவத்தோடு சம்பந்தமுடையது. நாதம் என்பது ஆகாசத்தோடு இணையும்போது, யோகசாத்திரப்படி அதற்குச் சக்தி அதிகம்" என்கிறார்.
சங்க இலக்கியங்களில் மனிதன் இயற்கையோடும் தட்பவெட்ப நிலையைச் சார்ந்து வாழ்ந்ததையும், அவர்களின் உறவுமுறைகளையும் சமுதாயத்தையும் கூறுவதுடன் அவர்கள் மனநிலை, குணங்கள் அவர்களின் இல்வாழ்க்கை முறை ஆகியவற்றைக் காண முடியும்.
சங்க இலக்கியத்தில் ஐந்து திணைகள் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டவை. ஐந்து திணைகளில், குறிஞ்சி மலையும் மலை சார்ந்த பகுதிகளையும்; முல்லை காடும் காடு சார்ந்த பகுதிகளையும்; மருதம் வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும்; நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதிகளையும்; பாலை மலையும் காடும் கதிரவனின் வெம்மையால் தாக்கிய பின்னர் உள்ள பகுதியையும் குறிக்கின்றன.
குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை முதலிய ஐந்து நிலப்பரப்புகளுக்கும் உறிய பண்கள் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பாலை நிலத்திற்குரிய பண் பொதுவாகப் பிரிவைப்பற்றி பாடும்போது பயன்பட்டது என்றும் தெரியவருகிறது.
கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை சங்க காலம் என நாம் அறிகிறோம்.
சங்க இலக்கியம்
கூறப்படுபவை சங்க இலக்கியங்கள் என்று பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். இவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனப்படும்.
பதினெண்கீழ்க்கணக்கு
சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. அப்போது சமூகத்தில் வாழ்வியல் விழுமங்களும் நீதிநெறிகளும் சற்றுமங்கிப்போய் இருந்தன. இந்நிலையை மாற்ற புலவர்கள் ஏற்ற நன்னெறிப்பாடல்களைப் பாடினர்.
திருவள்ளுவர்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் வள்ளுவர், "குழலினிது, யாழினிது" என்று குறிப்பிட்டுள்ளார். எனவே வள்ளுவர் காலத்தில் யாழ், குழல் பயன்பாட்டில் இருந்தது தெரிய வருகிறது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகையைச் சேர்ந்த புறநானூறு, அகநானூறு போன்றவற்றில் தமிழ் இசையின் கூறுகளைப் பற்றியும் பண்டையத் தமிழகத்தின் இசைச் சிறப்புகளையும் நாம் அறிய முடிகிறது.
இவற்றின் மூலம் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு, அவர்களின் வீரம் போன்றவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
சங்க காலத்தில் நன்கு வளர்ச்சி கண்ட தமிழிசை பின்னர் சற்று தொய்வு கண்டது.
கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை தமிழிசைக்கும் தமிழக வரலாற்றுக்கும் இருண்டகாலம் எனக் கூறப்படுகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் சமணர்கள் இசைத்தமிழை வெறுத்தனர். இதன் காரணமாக பல அரிய நூல்கள் அழிந்து போயின.
பிறகு கி.பி. 7, 8, 9 ஆவது நூற்றாண்டுகளில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரங்கள் தமிழ் இசையை வளர்த்தன.
அதேபோல் ஆழ்வார்கள் இயற்றிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" தமிழ் இசையை மேலோங்கி வளரச் செய்தது.
அரசர்கள் வளர்த்த தமிழிசை
பல்வேறு அரசர்கள் காலத்தில் தமிழ் இசை வளர்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
பல்லவர் காலத்தில் மஹேந்திர வர்மன் சங்கீர்ணம் என்னும் தாளத்தைக் கண்டறிந்ததால் ‘சங்கீர்ண ஜாதி’ என்று அழைக்கப்பட்டான். குடுமியான்மலை கல்வெட்டில் இராசசிம்மன், வீணாநாரதன், வாத்ய வித்யாதரன் எனப் புகழப்பட்டான்.
இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 965–1014) கோயில்களில் தேவாரப் பாடல்களைப் பாடச் செய்து அதற்கு மானியங்கள் வழங்கியதற்கான செய்திகள் கல்வெட்டுகளின் மூலம் தெரிய வருகின்றன.
கீர்த்தனைகளில் இசை
1500–1800 காலகட்டத்தில் தமிழ் இசை மூவர் என அழைக்கப்படும் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலகவிராயர் ஆகியோரின் தமிழ் கீர்த்தனைகள் தமிழ் இசைக்கு பெரும் அர்ப்பணிப்புச் செய்தன. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று கீர்த்தனைக்கு வடிவம் கொடுத்து வழங்கியவர்கள் இவர்களே.
கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைப் படைத்துள்ளார். கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய பிறகு அருணாசலக்கவி தமிழில் ‘இராம நாடகம்’ என்பதைக் அரங்கேற்றினார். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘சர்வ சமயக் கீர்த்தனை’, ‘சத்திய வேதக் கீர்த்தனை’ மிகவும் புகழ் பெற்றவையாகும்.
அருணகிரிநாதர் முருகன் மீது அளவில்லாத பற்றுக் கொண்டு பதினைந்தாம் நூற்றாண்டில் திருப்புகழை இயற்றினார். இவரது பாடல்களின் சிறப்பம்சமே சந்த மெட்டுகளாகும். சில சொற்றொடர்கள் திரும்பத்திரும்ப பாடும் போது பாடலுக்கு மெருகூட்டுகின்றன.
தமிழ் இசை இயக்கம்
விஜயநகர அரசர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த நாயக்க மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபொழுது தெலுங்கு இசைப்பாடல்கள் வெகுவாகப் பரவலாயின. இந்த நிலை கி.பி. 14ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீடித்தது. தமிழகத்தில் இசையரங்குகளில் தமிழ் பாடல்கள் ‘துக்கடா’ என்ற பெயரில் ஓரிரு பாடல்கள் மட்டுமே இறுதியில் பாடப்பட்டு வந்தன.
இந்த நிலையைக் கண்டு அண்ணாமலைச் செட்டியார், செட்டிநாட்டரசர், தமிழ்நாட்டில் பாடல்கள் தமிழிலேயே பாடப்பட வேண்டும்; பாடுவோருக்கும் கேட்போருக்கும் பாடல்களின் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும் என்று எண்ணி தமிழ் இசை இயக்கத்தை 1941ஆம் ஆண்டு தொடங்கினார். மேலும் ரூ.15,000 நன்கொடையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினார்.
புதிய தமிழ் இசைப் பாடல்களை உருவாக்குவதும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இதன் நோக்கமாகும். இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பழைய தமிழ் இசைப் பாடல்களை ஒன்று திரட்டி புத்தகமாக வெளியிட்டது.
1943ஆம் ஆண்டு சென்னையில் தமிழ் இசைச் சங்கம் நிறுவப்பெற்றது. மேலும் பல தமிழ்ச்சான்றோர்களின் பாடல்களையும் கருவிகளைப் பற்றிய நூல்களையும் தமிழ் இசைச் சங்கம் வெளியிட்டது.
தமிழ் இசையைப் பயிற்றுவிக்க பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டமும் தொடங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இச்சங்கத்தில் டிசம்பர் மாதத்தில் தமிழ் இசை விழா நடைபெறுகிறது. மேலும் 4 நாட்களுக்கு தேவாரப் பண் ஆராய்ச்சிக் கூட்டமும் நடத்தப்படுகிறது.
ஆக இன்றும் தமிழ் இசைச் சங்கம் ‘தமிழ் இசை’ வளர்ச்சிக்கு சீரிய தொண்டு செய்து வருகிறது.
1. தொல்காப்பியர்
தொல்காப்பியரின் காலம் திட்டவட்டமாக வரையறுத்துக் கூற இயலாது. இவர் இயற்றிய தொல்காப்பியம் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டதாகவும் 1610 அகவற்பாக்களைக் கொண்டதாகவும் உள்ளது.
இந்நூலில் இசையைப் பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஐவகை நிலங்கள், ஐவகை யாழ் வகைகள், ஐவகை பறை வகைகள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா என நான்கு வகை பாக்கள் பற்றியும் பாணர், கூத்தர், பொருநர், விறலியர் பற்றியும் கூறப்படுகிறது.
மேலும் பாணர்களால் பாடப்பட்ட பள்ளியெழுச்சி பாடல்கள் பற்றியும், ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ் பயன்பாட்டில் இருந்தது பற்றியும் அறியப்படுகிறது.
2. சாத்தனார்
நாட்டியக்கலையைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் மிகப் பழமையான நூல் சாத்தனார் இயற்றிய கூத்த நூலாகும். நாட்டியம், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளின் விளக்கங்கள் இதில் உள்ளன.
சாத்தனார் கூத்தனூரைச் சேர்ந்தவர் என்றும் தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். நாட்டியக்கலையில் அவர் ஆற்றிய தொண்டுக்காக “நாட்டிய பிரம்மர்” என்ற விருதும் வழங்கப்பட்டது.
3. இளங்கோவடிகள்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் முத்தமிழ் இலக்கியத்தை இயற்றியவர். இவர் இசை மற்றும் நடனக்கலையில் சிறந்த அறிவு பெற்றவர்.
சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்றம், ஆய்ச்சியர் குரவை போன்ற பகுதிகளில் பல இசைக் குறிப்புகள் காணப்படுகின்றன. முல்லை நிலத்தில் ஆயர் மகளிர் பாடிய பாடலுக்கு “முல்லைத் தீம்பாணி” என பெயர் வழங்கப்பட்டுள்ளது.
4. அறிவனார்
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், அறிவனார் என்ற இசைப்புலவர் பற்றி குறிப்பிட்டுள்ளார். அறிவனார் இயற்றிய நூல் “பஞ்சமரபு”.
இந்த நூலில் இசை, முழவு, தாளம், கூத்து, அபிநயம் ஆகிய ஐந்து கூறுகள் விளக்கப்பட்டுள்ளன. மேலும் இசைமரபு, வாச்சியமரபு, நிருத்தமரபு, அவிநயமரபு, தாளமரபு ஆகிய ஐந்து மரபுகளும் விளக்கப்பட்டுள்ளதால் இந்நூல் பஞ்சமரபு என அழைக்கப்படுகிறது.
5. காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார் தமிழ் இசையின் தாய் என்று அழைக்கப்படுகிறார். அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் பின்னர் தேவார ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
அவர் பாடல்களில் குறள், துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி என ஏழு ஓசைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இன்றைய இசையில் ப, த, ரி, க, நி, ஸ போன்ற சுரங்களாக அமைந்துள்ளன.
6. தேவார மூவர்
கி.பி. 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் தேவாரப் பாடல்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தமிழையும் சைவத்தையும் வளர்த்ததோடு தமிழ் இசையையும் வளர்த்தார்.
தேவார இசை கோயில்களில் பாடப்பட்டதாக பல கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய தேவார மூவருடன் மாணிக்கவாசகரின் திருவாசகமும் இசையுடன் பாடப்பட்டது.
திவாகர மற்றும் பிங்கல நிகண்டுகள், பஞ்சமரபு, கருணாம்ருத சாரம், யாழ்நூல் போன்ற நூல்களில் 103 பண்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் 53 பண்களுக்கு இணையான ராகங்கள் தமிழிசைச் சங்கத்தின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
7. சேக்கிழார்
சேக்கிழார் தொண்டை நாட்டுக் குன்றத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அருண்மொழித் தேவர். 2ஆம் குலோத்துங்க மன்னன் அரசவையில் கி.பி. 1113 முதல் 1150 வரை அமைச்சராகப் பணியாற்றினார். அரசவையில் இவர் “உத்தம சோழப் பல்லவன்” என்ற பட்டத்தைப் பெற்றார்.
இவர் பெருங்காப்பியமாகிய பெரியபுராணம் என்னும் நூலைப் பாடி “தொண்டர் சீர் பரவுவார்” என்ற பட்டத்தைப் பெற்றார். சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் அடிப்படையாகக் கொண்டு நாயன்மார்களின் வரலாற்றை 13 பகுதிகளாகப் பிரித்து 4286 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார்.
இந்தப் பாடல்கள் உயர்குலத்தோர், தாழ்ந்த குலத்தோர், துறவிகள், இல்லறத்தோர் என எந்தப் பேதமுமின்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்நூல் சைவ சமயத்தின் 12ஆம் திருமுறையாகக் கருதப்படுகிறது.
8. பதினெண் சித்தர்கள்
கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள் என்றும், கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுகிறது. யோகம் செய்து அறிவு பெற்றவர்களும் சித்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
பதினெண் சித்தர்கள்:
இவர்களுடன் உரோமமுனி, புலத்தியர், புசுண்டர், கரூரர், தேரையர் போன்றவர்களும் சித்தர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களும் தமிழ் இசைக்கு தொண்டாற்றியுள்ளனர்.
9. திருமூலர்
திருமூலர் “திருமந்திரம்” என்ற தலைசிறந்த நூலை இயற்றியவர். இவர் திருமூலநாயனார் என்றும் சிவயோகத்தில் அமர்ந்த யோகி என்றும் அழைக்கப்படுகிறார்.
திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. இது 9 தந்திரங்களாகவும் சைவ திருமுறைகளில் 10ஆம் திருமுறையாகவும் அமைந்துள்ளது.
அவரது புகழ்பெற்ற கருத்துகள்:
10. பட்டினத்தார்
பட்டினத்தார் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தார். ஆகையால் அவர் “பட்டினத்தார்” என அழைக்கப்பட்டார். சிவகலை என்ற பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கை நடத்தினார்.
மருதவாணர் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். ஒருநாள் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று எழுதி வைத்து அந்த சிறுவன் மறைந்தான். இதனால் பட்டினத்தாருக்கு நிலையாமை உணர்வு ஏற்பட்டது.
அதன்பின் அவர் வீட்டைத் துறந்து துறவியாகி பிச்சை எடுத்து வாழ்ந்து சிவபக்திப் பாடல்களை இயற்றினார். இறுதியில் திருவெற்றியூரில் சிவலிங்க வடிவில் ‘உருவச் சித்தி’ என்ற முக்தி நிலையை அடைந்தார்.
இவரது காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர் இயற்றிய பாடல்கள் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருமா ஒருபத்து ஆகிய நூல்களாகும். இவை ஐந்து நூல்களாக 11ஆம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
தேவாரம், திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களின் சாரம் இவரது பாடல்களில் காணப்படுகிறது. இவரது பாடல்களை வள்ளலாரும், தாயுமானவரும் பாராட்டிப் பாடியுள்ளனர். இப்பாடல்கள் சைவ சமயத்தின் கவிதைக் கருவூலமாகும்.
11. பன்னிரு ஆழ்வார்கள்
திருமாலை முழுமுதற் பொருளாகக் கொண்டு பன்னிரு ஆழ்வார்களும் “நாலாயிர திவ்ய பிரபந்தம்” என்னும் பாடல்களைப் பாடினர். அது தமிழ் இசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக அமைந்தது. இதனால் இயல் தமிழோடு இசைத்தமிழும் வளர்ச்சி பெற்றது.
பன்னிரு ஆழ்வார்கள்:
12. அருணாசலக் கவிராயர்
யோக மார்க்கத்தில் இடை, பிங்கலை, சுழுமுனை என்று மூன்று நாடிகள் குறிப்பிடப்படுகின்றன. அவ்வாறு தமிழ் இசைக்கும் உயிர்நாடிகளாக மூவர் கருதப்படுகின்றனர். அந்த மூவரில் இடையில் நிற்பவர் சீர்காழி அருணாசலக் கவிராயர்.
இவர் கி.பி. 1711 ஆம் ஆண்டு தில்லையாடி என்ற சிற்றூரில் கார்காத்த சைவ வேளாளர் குலத்தில் பிறந்தார்.
13. மாரிமுத்தாப்பிள்ளை
மாரிமுத்தாப்பிள்ளை தமிழ் இசையில் முக்கியமான புலவராகக் கருதப்படுகிறார். இவர் பாடிய கீர்த்தனைகள் சில நூறு எனக் கூறப்படுகிறது. அவரது கீர்த்தனைகளில் கச்சேரிகளிலும் பரதநாட்டியத்திலும் பாடப்பட்டு வரும் “காலை தூக்கி” என்ற யதுகுல காம்போதி ராகப் பாடல் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் சிறந்த இசை நூலாசிரியராகவும், சாஹித்யகர்த்தாவாகவும், சிறந்த இலக்கியப் படைப்பாளராகவும் விளங்கினார்.
1. கோபால கிருஷ்ண பாரதி
கோபால கிருஷ்ண பாரதி 1810 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தாலுகாவைச் சேர்ந்த நரிமணம் என்னும் இடத்தில் இராமஸ்வாமி பாரதியாருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள். தந்தையாரும் பாட்டனாரும் வீணை வாசிப்பதில் வல்லவர்களாக இருந்தனர்.
கோவிந்த சிவம் (கோவிந்தயதி) என்பவர் இவருடைய முதல் குருவாக இருந்தார். அவரிடம் சாஸ்திரங்களையும் யோகம் முதலியவற்றையும் கற்றார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சிறந்த புலமை பெற்றார்.
இவர் இராமதாசர் என்பவரிடம் ஹிந்துஸ்தானி இசையையும், கனம் கிருஷ்ணைய்யரிடம் கர்நாடக இசையையும் கற்றார்.
இவர் இயற்றிய “நந்தனார் சரித்திரம்” என்ற இசைநாடகம் மிகவும் புகழ்பெற்றது. இதனை “திருநாளைப் போவார் சரித்திரக் கீர்த்தனை” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் படைப்பு தியாகராஜரின் “பிரஹ்லாத பக்தி விஜயம்”, “நௌகா சரித்திரம்” போன்ற இசை நாடகங்களுடன் ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
தியாகராஜரின் நன்மதிப்பைப் பெற்றவர் கோபால கிருஷ்ண பாரதி. தியாகராஜரின் சீடர்கள் ஆபோகி ராகத்தில் பாடியதை கேட்டபோது, அதே ராகத்தில் “சபாபதிக்கு” என்று தொடங்கும் கிருதியை இயற்றினார்.
தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பின்பற்றி நாட்டை, கௌளை, ஆரபி, வராளி போன்ற ராகங்களில் பல கீர்த்தனைகளையும் இயற்றினார்.
தமிழறிஞர் டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயரும் சில காலம் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் இசை பயின்றார். நாகப்பட்டினத்தில் நந்தனார் சரித்திரம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
1896 ஆம் ஆண்டு கோபால கிருஷ்ண பாரதியார் இறைவனடி சேர்ந்தார்.
15. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அனைத்து சமயங்களுக்கும் ஏற்றவாறு பல பாடல்களை இயற்றியுள்ளார். இவர் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்.
1826 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள குளத்தூர் என்ற இடத்தில் பிறந்தார். 1889 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
16. இராமலிங்க அடிகளார்
இராமலிங்க அடிகளார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 1823 ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள மருதூர் என்ற சிற்றூரில் பிறந்தார்.
இவர் சென்னையிலும் தில்லையிலும் வாழ்ந்து, தனது ஐம்பத்தி ஒன்றாம் வயதில் வீடு பேரடைந்தார். இளமையிலேயே கவி பாடும் திறமை பெற்றவர்.
தேவார மூவர், மாணிக்கவாசகர், தாயுமானவர் ஆகியோரைப் பின்பற்றி பல பாடல்களை இயற்றினார். இந்தப் பாடல்கள் அனைத்தும் “திருவருட்பா” என்ற பெயரில் அறியப்படுகின்றன.
17. சுப்ரமணிய பாரதியார்
சுப்ரமணிய பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டையப்புரத்தில் பிறந்தார். இவரது இருபத்திரண்டாம் வயதில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இவர் பல வகையான பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
பண்டிதர் முதல் பாமரர் வரை அனைவரிடமும் தமிழ் இசையை தனது பாடல்களின் மூலம் கொண்டு சென்றார்.
18. எம். எம். தண்டபாணி தேசிகர்
எம். எம். தண்டபாணி தேசிகர் இருபதாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். தமது தந்தையிடமும், நாதசுர வித்வான் சத்தியாப்பிள்ளை அவர்களிடமும் இசைக் கலையைப் பயின்றார்.
கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் வயலினிசையையும் கற்றார். இவர் ஐம்பத்தியிரண்டு பாடல்களைக் கொண்ட “இசைத்தமிழ் பாமாலை” என்ற நூலை இயற்றியுள்ளார்.
19. பெரியசாமித்தூரன்
பெரியசாமித்தூரன் இருபதாம் நூற்றாண்டில் ஈரோட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார்.
பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் என்ற உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். 1987 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
20. அருணகிரிநாதர்
அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். தமிழ் மற்றும் வடமொழிகளில் புலமை பெற்றதோடு வாக்கேயகாரராகவும் (இயலிசைப்புலவர்) விளங்கினார்.
செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர் இளமையில் தவறான வழியில் சென்றதால் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் மிகவும் வருந்திய அவர் திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார்.
அப்போது முருகப் பெருமான் அவரை காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அருணகிரிநாதர் முருகப்பெருமானின் புகழைப் பாடுவதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டார்.
தொழுநோய் நீங்கி துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் புகழ்ந்து பல திருப்புகழ் பாடல்களை இயற்றினார். இவர் “கூடு விட்டு கூடு பாயும் சித்தி” பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது.
ஒரு சமயம் அரசன் வயிற்று வலியால் துடித்தபோது மருத்துவர்கள் ஒரு அபூர்வ மூலிகையை அருணகிரிநாதரால் மட்டுமே கொண்டு வர முடியும் என்று கூறினர். அதனால் அவர் கிளி உருவத்தில் சென்று மூலிகையை எடுத்து வரப் புறப்பட்டார். அவர் திரும்பி வரும்வரை தன் உடலை பாதுகாப்பாக வைக்கும்படி கூறிச் சென்றார்.
ஆனால் அவரைப் பிடிக்காத சிலர் அவர் திரும்பி வருவதற்கு முன்பே அவரது உடலை எரித்து விட்டனர். இதைக் கண்டு வருந்திய அருணகிரிநாதர் கிளி ரூபத்திலேயே பல பாடல்களை இயற்றினார். செய்யாறிலுள்ள வாதபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமான் மீது அவருக்கு மிகுந்த பற்று இருந்தது.
அருணகிரிநாதர் இயற்றிய முக்கிய நூல்கள்:
இவர் எழுதிய திருப்புகழ் தேவாரத்திற்கு சமமானதாகவும், கந்தரலங்காரம் மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்குச் சமமானதாகவும், கந்தர் அனுபூதி திருமந்திரத்திற்குச் சமமானதாகவும் கருதப்படுகிறது.
1894 ஆம் ஆண்டு வா.தா. சுப்ரமணியம் பிள்ளை முதன்முதலாக திருப்புகழின் முதல் பாகத்தை வெளியிட்டார். அருணகிரிநாதர் 16,000 பாடல்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவற்றில் சுமார் 2000 பாடல்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றன.
“தாளச் செல்வர்”, “சந்தபாவளப் பெருமான்” என்ற சிறப்புப் பெயர்களும் அருணகிரிநாதருக்கு உண்டு. 35, 108, 175 போன்ற பல தாளங்களிலும் திருப்புகழ் பாடல்கள் அமைந்துள்ளன. பல அபூர்வ ராகங்களும் தாளங்களும் இதில் காணப்படுகின்றன.
தேவார இசை கோயில்களில் பாடப்பட்டதாக பல கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய தேவார மூவருடன் மாணிக்கவாசகரின் திருவாசகமும் இசையுடன் பாடப்பட்டது.
திவாகர மற்றும் பிங்கல நிகண்டுகள், பஞ்சமரபு, கருணாம்ருத சாரம், யாழ்நூல் போன்ற நூல்களில் 103 பண்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் 53 பண்களுக்கு இணையான ராகங்கள் தமிழிசைச் சங்கத்தின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
21. பாபநாசம் சிவன்
பாபநாசம் சிவன் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் தாலுக்காவில் உள்ள போலகம் என்ற கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் இராமய்யா.
நீலகண்ட சிவன் பஜனையில் கலந்து கொண்டு பாடும் வாய்ப்பைப் பெற்றார். இந்த அனுபவத்தின் மூலம் அவர் இசையில் பெரும் அறிவைப் பெற்றார். கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரிடம் ஏழு ஆண்டுகள் தங்கி இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரது பாணியைக் கற்றார்.
1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனையில் முதன்முறையாக கலந்து கொண்டு தனது முதல் கச்சேரியை நிகழ்த்தினார்.
பாப்பா வெங்கட்ராமய்யரிடம் வயலினையும், அழகுநம்பியாப்பிள்ளையிடம் மிருதங்கமும் கற்றார். 1934 ஆம் ஆண்டு நூறு கிருத்திகளைக் கொண்ட தனது முதல் நூலை வெளியிட்டார்.
1962 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றார். தமிழ் இசைச் சங்கத்தின் மூலம் “இசைப் பேரறிஞர்”, “சங்கீத கலாநிதி” (1970) போன்ற விருதுகளையும் பெற்றார்.
1973 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவரை “தமிழ்த் தியாகராஜர்” என்றும் அழைப்பார்கள்.
தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். அவற்றில் சில:
இவரது பல கிருதிகள் M.K. தியாகராஜ பாகவதர் மற்றும் M.S. சுப்புலட்சுமி போன்ற இசைஞர்களால் பிரபலமானவை ஆனது.
22. நாகூர் ஹனிஃபா
நாகூர் இஸ்மாயில் முகமது ஹனிஃபா 1925 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பின்னணி பாடகரும், இஸ்லாமிய பாடல்களைப் பாடியவரும் ஆவார். இவர் பாடிய பல இஸ்லாமிய பாடல்கள் இன்றும் தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பப்படுகின்றன.
இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் பாடிய “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
மேலும் இவர் பாடியுள்ள சில முக்கிய பாடல்கள்:
23. சுவாமி விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர் மார்ச் 27, 1892 அன்று கிழக்கிலங்கையில் பிறந்தார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவம், அறிவியல், இசை போன்ற பல துறைகளில் கற்றுத் தேர்ந்த அறிஞராக விளங்கினார்.
இவர் சாமிதம்பி மற்றும் கண்ணம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்ட் ஆங்கிலப் பாடசாலையிலும், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் நடைபெற்றது.
கேம்பிரிட்ஜ் சீனியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு விரிவுரையாளராக இருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைத்தமிழ் இலக்கியங்களை கற்றார்.
1912 ஆம் ஆண்டு ஆசிரியர் சான்றிதழைப் பெற்றார். பின்னர் புனித மைக்கேல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1915 ஆம் ஆண்டு கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம் ஆண்டு அறிவியல் பட்டம் பெற்றார்.
மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று “பண்டிதர்” பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இந்தப் பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் இவரே ஆவார்.
1922 ஆம் ஆண்டு தனது ஆசிரியர் பணியைத் துறந்து சென்னை மயிலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்தார். அங்கு ஸ்வாமி சிவானந்தரால் பிரம்மச்சரிய தீட்சையும் பின்னர் சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் அங்கு பயின்ற அவர் இராமகிருஷ்ண மிஷன் வெளியிட்ட “இராமகிருஷ்ண விஜயம்” என்ற தமிழ் சஞ்சிகைக்கும் “வேதாந்த கேசரி” என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல கட்டுரைகளை எழுதியார்.
மேலும் தமிழ்ச்சங்க வெளியீடான “செந்தமிழ்” என்ற சஞ்சிகையிலும் இலக்கியக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு பல திறனாய்வு கட்டுரைகளை வெளியிட்டார். இக்கட்டுரைகள் “மதங்க சூளாமணி” என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
1924 ஆம் ஆண்டு ஸ்வாமி சிவானந்தரால் அவருக்கு “சுவாமி விபுலாநந்தர்” என்ற துறவுப் பெயர் வழங்கப்பட்டது. பின்னர் இலங்கைக்கு சென்று இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்ட கல்விப் பணிகளை ஒருங்கிணைத்தார்.
1925 ஆம் ஆண்டு முதல் திருகோணமலை கோணேஸ்வர இந்து கல்லூரியில் முகாமையாளராக பணியாற்றினார். கல்லூரியின் வளர்ச்சிக்காக 1928 ஆம் ஆண்டு அதிபர் பதவியையும் ஏற்றார்.
செட்டிநாட்டரசரின் வேண்டுகோளின்படி 1931 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் தமிழ் இசை தொடர்பான அவரது ஆராய்ச்சிகள் ஆரம்பமானது.
பண்டைய தமிழ் இசையைப் பற்றி ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டு இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா (Almorah) இடத்திலிருந்து வெளியிடப்பட்ட “பிரபுத்த பாரதம்” (Prabudha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
அந்த காலத்தில்தான் இசைத்தமிழ் பற்றிய முழுமையான ஆய்வாக “யாழ்நூல்” என்ற புகழ்பெற்ற நூல் உருவானது.
1943 ஆம் ஆண்டு இலங்கையில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது தமிழ்துறையின் முதலாவது பேராசிரியராக பணியாற்றினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வாறு வளர வேண்டும் என்ற திட்டங்களையும் அவர் வடிவமைத்தார்.
அவரது தலைசிறந்த ஆராய்ச்சி யாழ்நூல் தொடர்பானதாகும். 15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்த தகவல்களை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் வெளியிட்டார்.
1947 ஆம் ஆண்டு ஆனித்திங்கள் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதியில் இசை அறிஞர்கள் முன்னிலையில் தேவாரப் பண்கள் அமைத்து அரங்கேற்றினார்.
முதல் நாள் விழாவில் தமிழ்ப் புலவர்கள் மற்றும் அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களின் தெற்கு கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர் தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை,பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய' நாச்சியார் நான்மணிமாலை வித்வான் ஒளவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுகளுக்குப் பின்னர் சங்கீத பூஷணம் க.பெ. சிவானந்தம்பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.
இரண்டாம் நாள் விழா நாவலர் சோமசுந்தர பாரதியார், குமரன் ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் சென்னை பல்கலைக்கழக சாம்ப மூர்த்தி ஐயா, இசைப் பேராசிரியர் சுவாமிநாதப்பிள்ளை, கரந்தை கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.க.அவினாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவானந்தர் மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர்
"யாழ்" பற்றிய அறிய தகவல்களை எடுத்து விளக்கினார். வித்துவான் வெள்ளை வாரணர் யாழ் நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.
யாழ்நூல் அரங்கேற்றிய பிறகு உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித் திங்கள் 19 ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் சமாதியடைந்தார். அவரது உடல் மட்டக்களப்பு சிவானந்த வித்யாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
யாழ் மற்றும் வீணை
வயலின் என்ற பிடில் கருவி மேனாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதன்படி அது பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட கூர்ம வீணை என்ற கருவியுடன் தொடர்புடையதாகும்.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் யாழின் பல உறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இன்றைய வீணையின் உறுப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பல ஒற்றுமைகள் இருப்பதை அறியலாம்.
பண்டைய இலக்கியங்கள் கூறும் யாழின் உறுப்புகள் மற்றும் தற்போதைய வீணையின் உறுப்புகள் பின்வருமாறு ஒப்பிட்டு காணலாம்.
யாழ் உறுப்புகள் மற்றும் வீணை உறுப்புகள்
பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் யாழின் உறுப்புகளையும் இன்றைய வீணையின் உறுப்புகளையும் ஒப்பிட்டு கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.
| யாழ் உறுப்பு | வீணை உறுப்பு |
|---|---|
| 1. பத்தர் | குடம் |
| 2. போர்வை | மூடிப்பலகை |
| 3. வறுவாய் | கண் / நாதத்துளை |
| 4. சந்தி | குதிரை |
| 5. யாப்பு | டகாரி |
| 6. கவைகடை | நாகபாசம் |
| 7. முடுக்காணி | பிரடை |
| 8. கோடு / மருப்பு | தண்டு |
| 9. தகைப்பு | மேரு |
| 10. மாடகம் | மாடம் / பிரடைப்பெட்டி |
| 11. புரிநரம்பு | மெட்டு |
| 12. பண்நரம்பு / பண்மொழி நரம்பு | தந்தி / சாரணி |
| 13. ஒற்றுருப்பு | பக்கச் சாரணி / தாளத்தந்தி |
| 14. வண்ணப்பட்டடை வைத்தல் | மேளம் கட்டுதல் |
இவர்களோடு மேலும் பல சான்றோர்கள் தமிழ் இசைக்கு தொண்டாற்றியுள்ளனர்.
புறநீர்மை திருவாவடுதுறை ஆதீன ஏட்டுப்பிரதியின்படி தேவாரப் பண்களுக்கு வகுத்துள்ள இராகங்கள் பின்வருமாறு.
பகற்பண்கள்
இராப்பண்கள்
| பண் | இராகம் |
|---|---|
| தக்கராகம் | கன்னட காம்போதி |
| பழந்தக்கராகம் | சுத்த சாவேரி |
| சீகாமரம் | நாதநாமகிரியா |
| திருவிருத்தம் | சிந்து கானடா |
| வியாழக் குரிஞ்சி | சௌராஷ்டிரம் |
| மேகராகக் குறிஞ்சி | நீலாம்பரி |
| குரிஞ்சி | மலஹரி |
| ஆந்தாளிக்குறிஞ்சி | சைலதேசாக்ஷி / ஸாமா |
பொதுப்பண்கள்
ஐந்து வகையான இசைக் கருவிகள்
தமிழ் இசையில் தாளக் கருவி, நரம்புக் கருவி, மிதற்றுக் கருவி போன்ற பல்வேறு இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. யாழ் மீட்டும் வழிமுறைகளும் இருந்தன. இவற்றின் வளர்ச்சியிலிருந்து மண்டில இசை முறையும் வளர்ச்சி பெற்றது.
முல்லைப்பண்
முல்லைப்பண் : ஸ ரி க ப த (C D E G A) இதே கர்நாடக இசையில் மோகன ராகத்தின் அடிப்படையாகும்.
பண்களுக்கு இணையான கர்நாடக ராகங்கள்
| பண் | வகை | கர்நாடக ராகம் |
|---|---|---|
| பழம்பஞ்சுரம் | பகற்பண் | சங்கராபரணம் |
| இந்தளம் | பகற்பண் | மாயாமாளவகௌளை |
| புறநீர்மை | பகற்பண் | பூபாளம் |
| சீகாமரம் | இரவுப்பண் | நாதநாமக்ரியா |
| செந்துருத்தி | பொதுப்பண் | மத்யமாவதி |
| செவ்வழி | பொதுப்பண் | யதுகுலகாம்போதி |
| நட்டபாடை | பகற்பண் | கம்பீரநாட்டை |
| கௌசிகம் | பகற்பண் | பைரவி |
| பழந்தக்கராகம் | இரவுப்பண் | சுத்தசாவேரி |
| குறிஞ்சி | பொதுப்பண் | ஹரிகாம்போதி |
| ஆந்தாளிக்குறிஞ்சி | இரவுப்பண் | சாமா |
| மேகராகக்குறிஞ்சி | இரவுப்பண் | நீலாம்பரி |
| வியாழக்குறிஞ்சி | இரவுப்பண் | சௌராஷ்ட்ரம் |
| பஞ்சமம் | பகற்பண் | ஆகிரி |
| காந்தாரப் பஞ்சமம் | பகற்பண் | கேதாரக்கௌளை |
| தக்கராகம் | பகற்பண் | காம்போஜி |
| தக்கேசி | பகற்பண் | காம்போஜி |
| காந்தாரம் | இரவுப்பண் | நவரோசு |
| கொல்லி | இரவுப்பண் | நவரோசு |
| கொள்ளிக்கௌவானம் | இரவுப்பண் | நவரோசு |
| பியந்தைக் காந்தாரம் | இரவுப்பண் | நவரோசு |
| நட்டராகம் | பகற்பண் | பந்துவராளி |
| சாதாரி | பகற்பண் | பந்துவராளி |
| எண் | இயற்றியவர் | வருடம் | பாடல்களின் எண்ணிக்கை / மொழி |
|---|---|---|---|
| 1 | அருணகிரிநாதர் | 1480 | தமிழ் – 760 (திருப்புகழ்) |
| 2 | முத்துத்தாண்டவர் | 1525–1625 | தமிழ் – 165 |
| 3 | பாபநாச முதலியார் | 1650–1725 | தமிழ் |
| 4 | ஊத்துக்காடு வேங்கடகவி | 1700–1765 | ஸமஸ்கிருதம், தமிழ் – 200 |
| 5 | அருணாச்சலக்கவி | 1711–1788 | தமிழ் – 320 (இராம நாடகம்) |
| 6 | மாரி முத்தாப்பிள்ளை | 1717–1787 | தமிழ் – 42 |
| 7 | கனம் கிருஷ்ணைய்யர் | 1790–1854 | தமிழ் – 85 |
| 8 | திருவாரூர் ராமசாமிப்பிள்ளை | 1798–1852 | தமிழ் |
| 9 | கவிகுஞ்சர பாரதி | 1810–1896 | தமிழ் – 200 |
| 10 | கோபால கிருஷ்ணபாரதி | 1811–1896 | தமிழ் – 395 |
| 11 | நீலகண்ட சிவன் | 1839–1900 | தமிழ் – 300 |
| 12 | அண்ணாமலை ரெட்டியார் | 1865–1891 | தமிழ் – 40 |
| 13 | மகாகவி சுப்ரமணிய பாரதியார் | 1882–1921 | தமிழ் – 230 |
| 14 | பெரியசாமித் தூரன் | 1908–1987 | தமிழ் – 305 |
| 15 | Dr. S. ராமநாதன் | 1917–1988 | தமிழ் – 50 |
| 16 | பாபநாசம் சிவன் | 1890–1973 | தமிழ், மணிப்ரவாளம், சமஸ்கிருதம் – 535 |
| 17 | சுத்தானந்த பாரதி | 1897–1990 | தமிழ், சமஸ்கிருதம் – 1090 |
| 18 | கோட்டீஸ்வர ஐயர் | 1870–1940 | தமிழ், சமஸ்கிருதம் – 200 |
இந்த பாடல்கள் 72 மேளகர்த்த ராகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
திரு வெங்கடசுப்ரமணியம் (2010) என்பவர், கர்நாடக சங்கீதம் கி.பி. 1336 முதல் கி.பி. 1614 வரையிலான காலகட்டத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தோன்றியதாகக் கூறுகிறார்.
அப்ரஹாம் பண்டிதர் தனது “கானாம்ருத ஸாகரம்” (1917) என்ற ஆய்வில், தமிழ் இசைப் பாடல்கள் சாத்திரக்கூறுகள் அடிப்படையாக மட்டும் கொண்டு இயற்றப்படவில்லை என்றும், வாழ்வு சார்ந்த கருத்துகளை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன என்றும் விளக்குகிறார்.
பன்னிரண்டாம் சோமேஸ்வர நூற்றாண்டில் “பூலோகமாமல்லா” என்பவர் தமிழ்ப் பண்ணிசையை முதன்முறையாக “கர்நாடக சங்கீதம்” என்று பெயரிட்டு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கர்நாடக இசையின் பரிணாம வளர்ச்சிக்கு தமிழ் இலக்கியங்கள் மிகுந்த உறுதுணையாக இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.
இதற்கான பல்வேறு ஆதாரங்களும் குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
ஸ்ரீராம் (2004) என்பவர், “கர்நாடக சங்கீதம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். இந்த இசை வகை தென்னிந்தியப் பகுதியில் தோன்றியதால், அந்தப் பகுதியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு “கர்நாடக சங்கீதம்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.
மேலும், சமஸ்கிருதத்தில் “கர்நாடகம்” என்றால் மிகப் பழமையானது என்று பொருள். அந்த பொருளிலும் இந்த இசை முறைக்கு “கர்நாடக சங்கீதம்” என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புரந்தரதாசர் கர்நாடக சங்கீதத்தின் முன்னோடியாக அறியப்படுகிறார். அவரை “கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர்” என்று அழைப்பர்.
கர்நாடக சங்கீதத்தை கற்கும் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும்படி அடிப்படைப் பாடங்களைக் முறைப்படுத்தியவர் புரந்தரதாசர் ஆவார். அவர் வகுத்த முறை இன்றும் சிறு மாற்றங்களுடன் நடைமுறையில் உள்ளது.
கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சியில் அன்னமாச்சாரியார் அவர்களுக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. அவரை “பாட கவிதா பிதாமஹர்” என்று அழைப்பர்.
இவர் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். “பல்லவி – சரணம்” என்ற அடிப்படையில் பாடல்களை இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை மனோநிலை மற்றும் குறியீடு
| குறியீடு இசை | கர்நாடக இசை |
|---|---|
| பண் | ராகம் |
| பதம் | ஸ்வரம் |
| தாளம் | தாளம் |
| ஆரோசை | ஆரோகணம் |
| அமரோசை | அவரோகணம் |
| பதங்கள் ஏழு | ஸப்த ஸ்வரங்கள் |
தமிழ் இசைப் பதங்கள் மற்றும் கர்நாடக ஸ்வரங்கள்
| தமிழ் இசைப் பதம் | கர்நாடக ஸ்வரம் |
|---|---|
| குரல் | ஷட்ஜம் (ஸ) |
| துத்தம் | ரிஷபம் (ரி) |
| கைக்கிளை | காந்தாரம் (க) |
| உழை | மத்யமம் (ம) |
| இளி | பஞ்சமம் (ப) |
| விளரி | தைவதம் (த) |
| தாரம் | நிஷாதம் (நி) |
கர்நாடக ராகங்களும் அதன் நன்மைகளும்
| ராகம் | நன்மைகள் |
|---|---|
| அமிர்தவர்ஷினி | உஷ்ணத்தைக் குறைக்க உதவும் |
| பைரவி | தோல் நோயைக் குறைக்க உதவும் |
| சாருகேசி | இளமையாக தோற்றம் அளிக்க உதவும் |
| தேஷ் | ஆத்ம திருப்தி ஏற்பட உதவும் |
| கானமூர்த்தி | நீரிழிவு நோயைக் குறைக்க உதவும் |
| ஹேமவதி | மூட்டு வலியைக் குறைக்க உதவும் |
| ஷிந்தோளம் | வயிறு சம்பந்தமான நோய்களைக் குறைக்க உதவும் |
| கல்யாணி | அச்சம் தவிர்க்க உதவும், திருமணம் நடைபெற உதவும் |
| காபி | மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் |
| ஹரகரப்ரியா | நரம்பு சம்பந்தமான நோய்களைக் குறைக்க உதவும் |
| கேதாரம் | மனத்தளர்ச்சியைக் குறைக்க உதவும் |
| கீரவாணி | தியானம் செய்ய உதவும் |
| கோகிலம் | வயிற்று உறுப்புகளில் கல் ஏற்படுவதைத் தடுக்க உதவும் |
| மதுவர்ஷினி | தலைவலி மற்றும் கால் வலி குறைக்க உதவும் |
| மத்யமாவதி | மயக்கம் மற்றும் தலைசுற்று தவிர்க்க உதவும் |
| மோகனம் | அழகும் அறிவும் வளர உதவும் |
| நீலாம்பரி | நினைவாற்றலைக் கூட்டவும், ஆழ்ந்த உறக்கத்திற்கும் உதவும் |
| ரோகினி | முதுகு வலியைக் குறைக்க உதவும் |
| சாமா | நன்கு தூங்கவும் மன உளைச்சல் குறையவும் உதவும் |
| சிந்து பைரவி | துன்பம் வருமுன் காக்க உதவும் |
| சந்தியா கல்யாணி | காது, மூக்கு, கண் நோய்களை குறைக்க உதவும் |
| சங்கராபரணம் | மன அமைதி ஏற்பட உதவும் |
| சுபபந்துவராளி | சரியான முடிவு எடுக்க உதவும் |
| யமுனகல்யாணி | புத்துணர்ச்சி அளிக்க உதவும் |
| ஸ்ரீராகம் | ஜீரணிக்கும் தன்மை மேம்படும் |
| த்விஜாவந்தி | நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்த உதவும் |
இசையும் மருத்துவமும் (Music Therapy)
பிரபல கவிஞர் கண்ணதாசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் ஆனந்த பைரவி ராகத்தில் வயலின் வாசித்தார். அதை கேட்டதன் மூலம் கண்ணதாசன் அவர்களின் இரத்த அழுத்தம் சீரானதாக தொலைக்காட்சி பேட்டியில் கூறப்பட்ட செய்தி உள்ளது.
ஹரிகேசநல்லூர் கே. வெங்கடராமன் அவர்கள் இசையால் நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையை ஆங்கிலத்தில் “Music Therapy” என்று அழைக்கப்படுவதாக விளக்குகிறார்.
ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் சீடர் ஒருவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தீட்சிதர் அவர்கள் அடாணா ராகத்தில் குரு பகவானை புகழ்ந்து ஒரு கீர்த்தனையைப் பாடச் சொன்னார். அதைப் பாடியபின் அந்த சீடரின் வயிற்று வலி குணமானதாக ஒரு தகவல் கூறப்படுகிறது.
இசையால் மழையைப் பொழிய வைக்க முடியும்
“அமிர்தவர்ஷிணி” ராகத்தைப் பாடினால் மழை பெய்யும் என்பது அனுபவபூர்வமாக கூறப்படும் ஒரு நம்பிக்கையாகும்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள் கூறியதாவது: சென்னையில் பல மாதங்களாக மழை பெய்யவில்லை. ஒரு நாள் நான் காரில் பயணம் செய்தபோது எங்கும் வறண்ட நிலையைப் பார்த்தேன்.
அப்போது “ஏன் அமிர்தவர்ஷிணி ராகத்தைப் பாடக்கூடாது?” என்று நினைத்து அந்த ராகத்தில் ஒரு பாடலைப் பாடினேன். பாடிக்கொண்டிருந்தபோது நான் பயணித்த காரின் மேல் சிறு சிறு மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. அதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வகையில் பழங்காலம் முதல் இன்றுவரை மழைக்கும் இசை ராகங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக பலரும் விளக்கிக் கூறி வருகின்றனர்.
கர்நாடக ராகங்களும் கிரகப்பலன்களும்
| கிரகம் | ராகம் |
|---|---|
| சூரியன் | ஹரிகாம்போதி |
| சந்திரன் | அசாவேரி |
| செவ்வாய் | காமவர்த்தினி |
| புதன் | சக்ரவாகம் |
| சுக்கிரன் | தர்மவதி |
| சனி | நாடகப்ரியா |
| வியாழன் | கோசலம் |
கர்நாடக ராகங்களும் ராசிப்பலன்களும்
| ராசி | ராகம் |
|---|---|
| மேடம் | லதாங்கி |
| ரிஷபம் | வாசஸ்பதி |
| மிதுனம் | கீரவாணி |
| கடகம் | ஹேமவதி |
| சிம்மம் | கல்யாணி |
| கன்னி | சண்முகப்ரியா |
| துலாம் | ராகவர்த்தனி |
| விருச்சிகம் | நடபைரவி |
| தனுசு | தர்மவதி |
| மகரம் | கானமூர்த்தி |
| கும்பம் | சாரங்கா |
| மீனம் | சாருகேசி |
சுருதி
சுருதி என்றால் ஆதார ஒலி நிலையாகும். இது ஆங்கிலத்தில் பிட்ச் என்று கூறப்படும். ஆதார ஷட்ஜம் அதாவது மத்யஸ்தாயி ஷட்ஜத்தையே ஆதார சுருதியாகக்கொள்கிறோம். இவை ஒவ்வொரு குரலுக்கும் ஏற்றவாறு மாறும். உதாரணமாக ஆண்களுக்கு 1, 1 1/2 யாகவும், பெண்களுக்கு 5, 5 1/2, 6 போன்றும் இருக்கும். ஆண்களின் சுருதிக்குத் தக்கு சுருதி என்று கூறப்படும். சுருதி இரண்டு வகைப்படும்:
1. பஞ்சம சுருதி
2. மத்யம சுருதி
மத்யமஸ்தாயி ஷட்ஜத்தை ஆதார ஷட்ஜமமாகக் கொள்ளும் ஸ்ருதிக்கு பஞ்சம ஸ்ருதி என்றும், ஆதார ஷட்ஜமத்துக்கு மத்யஸ்தாயி மத்யமத்தை ஆதார ஷட்ஜமமாகக் கொள்ளும் போது அவை மத்யம சுருதி என்று அழைக்கப்படும்.
சுரங்கள்
ஸ, மற்றும் ப நிலையான சுரங்கள். எனவே அவை பிரக்ருதி சுவரம் என்று பெயர். ரிகமதநி (ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2) விக்ருதி ஸ்வரம் எனப்படும். இவைகள் ஒன்றாக சேர்ந்து மொத்தம் 12 ஸ்வரஸ்தானங்களாகும்.
ஆரோகணம் – அவரோகணம்
சுரங்கள் ஒன்றுக்கொன்று ஒலியில் அதிகரித்துக்கொண்டே போனால் ஆரோகணம் (Ascending Order) என்றும், சுரங்கள் ஒன்றுக்கொன்று ஒலியில் குறைந்து கொண்டே போனால் அவரோகணம் (Descending Order) என்று கூறப்படும். அனைத்து ராகங்களுக்கும் இந்த ஆரோகணம், அவரோகணம் கிரமத்தை ஒட்டியே வைத்தே அமைக்கப்படும்.
தாளம்
பாட்டின் நடையை (போக்கை) வரைமுறை செய்வதற்குத் தாளம் என்று பெயர். இது ஆங்கிலத்தில் Rhythm என்று சொல்லப்படும். இது ஒவ்வொரு பாட்டிற்கும் வித்தியாசப்படும். இது காலப்ரமாணம் என்று சொல்லப்படுகிறது. இதில் ஆவர்த்தனம் என்பது ஒரு தாளத்தை முழுமையாக ஒருமுறை போட்டு முடிப்பதற்கு ஒரு ஆவர்த்தனம் என்று கூறப்படும். உதாரணமாக ஆதி தாளம், அதாவது சதுஸ்ரஜாதி லகு, த்ருதம், த்ருதம், அதாவது 8 அக்ஷரங்கள். இவற்றை ஒரு முறை போட்டு முடிப்பதற்கு ஒரு ஆவர்த்தனம் என்று கூறப்படும்.
முக்கிய தாளங்கள் (சப்த தாளங்கள்)
1. துருவ தாளம்
2. மட்டிய தாளம்
3. ரூபக தாளம்
4. ஜம்ப தாளம்
5. திரிபுட தாளம்
6. அட தாளம்
7. ஏக தாளம்
இந்த சப்த தாளங்களின் அங்கமாக 3 அம்சங்கள் அமைந்திருக்கிறது: லகு, த்ருதம், அனுத்ருதம்.
லகு
லகு என்பது ஒரு தட்டு தட்டிவிட்டு விரலால் எண்களை எண்ணுவதாகும். 5 வகை ஜாதிகள் உள்ளன:
1. திஸ்ர ஜாதி லகு
2. சதுஸ்ர ஜாதி லகு
3. கண்ட ஜாதி லகு
4. மிஸ்ர ஜாதி லகு
5. சங்கீர்ண ஜாதி லகு
லகுவின் அடையாளக் குறி ஒரு நேர்க்கோடு |. உதாரணம் |4 என்றால் சதுஸ்ரஜாதி லகு ஆகும்.
த்ருதம்
இவற்றின் அக்ஷரங்கள் 2 ஆகும். தட்டித் திருப்புதல் (பீட் அண்ட் வேவ்). அடையாளக் குறி 0 (Full Moon).
அனுத்ருதம்
இவற்றின் அக்ஷரம் 1. தட்டு மட்டும். அடையாளக் குறி U (Half Moon).
இந்த 7 தாளங்கள் × 5 ஜாதிகள் = 35 தாளங்களாகின்றன. மேலும் 3 அங்கங்களான குரு, ப்லுசம், சாகபாதம் சிம்கநந்தன தாளம், சரபந்தன தாளம் போன்ற அபூர்வ தாளங்களில் கையாளப்படுகின்றன.
இசைக் கருவிகள் 4 வகைப்படும்:
உதாரணங்கள்:
நரம்புக்கருவிகள்: யாழ், தம்புரா, வீணை, வயலின், கோட்டுவாத்யம், மாண்டலின்
துளைக்கருவிகள்: புல்லாங்குழல், நாதஸ்வரம், கிளாரினெட்
தோற்கருவிகள்: தவில், மிருதங்கம், கஞ்சிரா
கனகருவிகள்: ஜால்ரா, குழித்தாளம், ஜலதரங்கம்
பண்டை இசைக் கருவிகளில் யாழ் மிகச் சிறப்பு வாய்ந்தது. யாழ் நரம்புகளால் கட்டப்பட்டது. தொல்காப்பியர் இதைப் பற்றி விவரித்துள்ளார். மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சியில், இந்நிசை வீணையர் ஒரு பால், யாழினர் ஒரு பால் என்று குறிப்பிட்டுள்ளார். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவார மூவர் (அப்பர், சுந்தரர், சம்பந்தர்) "மாசில் வீணையும்" என்று கூறியுள்ளார்.
தமிழ்ப் பண்பாட்டு வரலாறு இசைக் கருவிகளை இயம், தூரியம், கலம், வாத்தியம், வாச்சியம் என பலவாறு அழைப்பர். சிலப்பதிகாரத்தில் இசைக் கருவிகளின் உருவ அமைப்பு, இசைக்கும் முறை, இசைத்தன்மை இவற்றை விவரித்துள்ளதால் பண்டைகால இசைமரபுகளை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் நால்வகை இசைக்கருவிகளில் 500க்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 250 இசைக்கருவிகள் இடத்திற்கு தகுந்தவாறு இசைக்கப்பட்டன.
ஆலய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் 5 வகை:
கோயில்களில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் சில: மத்தளம், படகம், பேரிகை, சல்லரி, மல்லரி, காகளம், பூரி, ஏகதாளம், சங்கு, பேரிவாத்யம்.
நாதசுரத்துடன் தவில், தாளம் (சல்லரி) ஒத்து சேர்ந்து சிறப்புக் கொண்டிருக்கின்றன. நாதசுரத்தில் திமிரி, பாரி இருவகை இருப்பினும் ஆலயங்களில் பெரிதும் பயன்படுத்துவது பாரி நாதசுரம் ஆகும்.
புலவர் அறிவானரால் இயற்றப்பட்ட பஞ்சமரபு என்னும் இசைத் தமிழ் நூலில் 30 தோல் கருவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது:
"பேரிகை படகம் இடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழா தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடுதாம்பு
நிசாளம் துடுமை சிறுபறையடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கி துடிபெரும் பறையென
மிக்க நாலோர் விரித்துரைத்தனரே
தமிழ்நாட்டில் பழமையும் பெருமையும் வாய்ந்த தோற்கருவி முரசு ஆகும். தொல்காப்பியத்திலும் குறிப்பு உள்ளது. முரசைப் "பணை" என்றும் கூறியிருக்கிறார். முக்கிய செய்திகளை அறிவிக்க முரசு பயன்படுத்தப்பட்டது. குடமுழா என்னும் பஞ்சமுக வாத்தியம் அருணகிரிநாதர் "குடபஞ்சமுகி" எனக் கூறியுள்ளார்.
புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் யாழின் உறுப்புகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன. ஏழிசைக்கும் பொருத்தமாக அமைந்திருக்கும் நரம்பிசைக்கருவிகள் வீணையும் யாழும் ஆகும்.
ஓசை
உலகம் ஓசையில் உருள்வது, சுழலும்
கோளில் ஓசை எழுதல் இயல்பு.
அசையும் காற்றும் ஓசை தருவன
செடிகொடிகள், மரக்கிளைகள்,
இவை மோதும் காற்றால் மூளும்
பலதரத்தில் அமைவன.
மழை பொழிகையில் எழுவதோர்
ஓசை; மழையின் பொலிவுக்கேற்ற
வகையில் வேறுபடும் ஓசைகள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு இடமும் இசையின் சிறப்புகளுடன் சிறந்து விளங்கி வந்துள்ளது. இப்படிச் சிறந்து விளங்கிய இசை மையங்களை சங்கீத பீடங்கள் என்று அழைப்பர்.
ஒரு இடம் இசைமையமாக விளங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன:
இந்த வகைப்படுத்தலின் படி, பல இசை மையங்கள் சிறப்புற்று விளங்கியுள்ளன. அவை:
இந்த இடங்கள் அனைத்தும் தென்னகத்தின் முக்கிய சங்கீத மையங்களாகக் கருதப்படுகின்றன.
திருமதி கௌரி கோகுல்
சங்கீதத்தை முதன்முதலில் கற்கத் தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:
முதன்முதலில் ஸ ப ஸ் ப ஸ என்ற ஸ்ருதி பயிற்சிக்குப் பிறகு:
கமகம் என்பது அசைவு என்று பெயர். இசையின் உயிர் நாடியே கமகம் ஆகும். இது நம் தென்னிந்திய இசையின் முக்கிய பங்காகும். ஆரம்ப நிலையிலேயே கமகத்துடன் பயிற்சி செய்ய வேண்டும்.
பிறகுச் சிறிய கீதங்கள் (ஸ்வா-ஸாஹித்யத்துடன் அமைந்திருக்கும் சூளாதிகள்) கற்பிக்கப்படுகின்றன. பிறகு ஸ்வரஜதி, ஜதிஸ்வரம் கற்பிக்கப்படுகின்றன. இதன் பின்பு வரும் வர்ணம் உருப்படியைக் கற்க ஏற்றது. இந்த வர்ண பயிற்சியே தென்னிந்திய இசைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
முதன் முதலில் இசை பயில்பவர்கள் மாயாமாளவகௌளை ராகத்தில் பயிலவேண்டும். சங்கீத பிதாமஹர் ஸ்ரீ புரந்தரதாஸர் இதற்குக் காரணகர்த்தா ஆவார். இந்த பயிற்சிகளை நன்கு கடைப்பிடிக்க வேண்டும்.
கீதம் வரையிலும், அதாவது ஸ்வராவளி வரிசை முதல் கீதங்கள் வரை, மூன்று காலங்களில் பயிற்சி செய்து பாடவேண்டும்.
மேல்கட்டப் பயிற்சி
வர்ணங்கள் 2 காலம் பாட வேண்டும். பிறகு வர்ணம் திஸ்ர நடையில் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு இடம் தள்ளி, இரண்டு இடம் தள்ளி, மூன்று இடம் தள்ளி வர்ணங்களைப் பாடினால் தாளக்கட்டு நன்றாக இருக்க உதவும்.
ஸ்வர ஸ்தானங்கள் நன்கு பதிந்த பிறகே அகார, இகார, உகாரமாய், அதாவது ஸ்வரத்திற்குப் பதிலாக அ, இ, உ என்று அகாரத்துடன் பாட வேண்டும். வர்ணங்களையும் அகாரமாய் பாட வேண்டும். இது தொண்டைக்கு, அதாவது குரலுக்கு நல்ல ஒரு பயிற்சி ஆகும். நன்கு ரவை போல் உருளும். ராகம் பாட, கல்பனை ஸ்வரங்களைப் பாட வர்ணம் தான் நல்ல முன்னோடி.
அக்காலத்தில் நாதஸ்வர வித்வான்களிடத்தே சங்கீதம் பயின்று வந்தனர். அப்படிப் பயிலும்போது நல்ல அடிப்படை ஞானம் வளரும்; நாதஸ்வரக்காரர்களிடையே இசையில் அஸ்திவாரம் மிகவும் நன்றாக இருக்கும்.
வர்ணங்களுக்குப் பிறகு செய்யப்படும் பயிற்சிகள்:
பிறகு ராகம், தானம், பல்லவி போன்ற விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றுள்:
இந்தப் பயிற்சிகள் அவரவர்கள் வழிப்படி, சங்கீதம் பயிற்றுப்பவர்கள் அவர்களது வழியில் சொல்லிக் கொடுப்பார்கள்.
திரு ஏ பி ராமன், மூத்த எழுத்தாளர், சிங்கப்பூர்.
இசையை வளர்த்த பணியில் தமிழ் சினிமாக்களுக்கும் நிறையப் பங்கு உண்டு. தமிழ்த் திரை பேச ஆரம்பித்த காலங்களிலேயே பாடல்கள் அதிகமாகப் பாடத் தொடங்கியது. அதுவும் முறையான கர்னாடக இசையில் ராக பந்தாக்களுடன் பாடப்பட்டது. அதற்காகவே இசை தெரிந்த பகவதர்கள் அன்றைய ஆரம்ப காலப் படங்களில் கதாநாயகர்களாக நடித்துப் பாடவும் செய்தனர். பாடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
புராணப் படங்களில் முக்கிய பாகவதர்கள்
பிற் கால பிரபல பாடக நடிகர்
பின்னணி கலைஞர்கள் அறிமுகமானவர்கள்
இசை அடிப்படை தெரிந்த கலைஞர்கள்
இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் பாடியுள்ளனர்.
கர்நாடக இசை வடிவங்கள் மற்றும் தமிழ் திரை இசை
கர்நாடக இசை வடிவங்கள் மெல்லிசை கீதங்களாக மாறியபோது, தமிழ்த் திரையுலகில் இசை நுணுக்கங்கள் தெரிந்த பல திரை இசையமைப்பாளர்கள் உருவாயினர்:
இவர்கள் இசை வழியாக தமிழ்ப் படங்களுக்கு உயிர் கொடுத்தனர். அவர்களுக்கு கர்நாடக இசையும் தேவைப்பட்டது. அதே நேரத்தில், திரை ரசிகர்களைக் கவரும் பாமர ரஞ்கப் பாடல்களும், மெட்டுக்களும் தேவைப்பட்டன. ஆகவே, இசை ராகங்களை இனிய திரைப் பாடல்களாக மாற்றும் கலையில் அவர்கள் வல்லவர்களாக விளங்கினர்.
அப்பட்டமான பல ராகங்களை அவர்கள் நம் ரசனைக்குக் குழைத்துத் தந்ததை நினைவுபடுத்திப்பார்ப்போம்.
கல்யாணி ராகம் – ராகங்களின் அரசி
கல்யாணி ராகம் மிகப் பழமையான ராகங்களுள் ஒன்றாகும். சங்கீதக்காரர்கள் இதனை 65வது மேளகர்த்தா ராகம் என்று குறிப்பிடுவர்; சிலர் இதை தாய் ராகம் என அழைக்கிறார்கள். நமக்கு இதற்கான விவரங்கள் தெரியாவிட்டாலும், தமிழ்த் திரையில் உள்ள பாடல்களைப் பெரிதும் ரசித்து மகிழ முடிகிறது.
கச்சேரி மேடைகளில் தனி நடை போட்டு சஞ்சாரம் செய்யும் கல்யாணி ராகம், தமிழ் சினிமாவில் எப்படி சுற்றி வந்தது என்பதைப் பார்ப்போம்.
அபாரமான கல்யாணி ராகம், ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவில் தலை காட்டியது. சுப்பையா பாகவதர், ஹொன்னப்ப பாகவதர் போன்றோர் அன்றைய சீதா கல்யாணம், சுபத்ரா கல்யாணம் போன்ற படங்களில் பச்சையாக கீர்த்தனை பாணியில் கல்யாணியை பாடினர். எப்படிப் பாடினாலும் தன் சுய உருவை இழக்காத இந்த அழுத்தமான ராகத்தை, பின்னால்ப் படங்களில் திரை இசையமைப்பாளர்கள் தங்களின் நுட்பத்தால் பாமர ரஞ்சகமாக்கிக் காட்டினர்.
நம் திரைப்படங்களில் கல்யாணியின் நடை, உடை, பாவனைகளை உங்கள் பார்வையால் ரசிக்கலாம்.
கல்யாணி ராகப் பாடல்கள் மற்றும் திரை காட்சிகள்
ரஜினி நடித்த 'மன்னன்' படத்தில் இடம்பெற்ற, சோகத்தைப் பிழிந்து தந்த 'அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ' பாடல் காட்சியில், ரஜினி தாய் பண்டரிபாயை தூக்கிச் சுமந்து ஜேசுதாஸ் குரலில் பாடி வலம் வருவார். இந்தக் காட்சி மற்றும் பாடல் இரண்டும் ரசிகர்களின் நெஞ்சங்களை உருக்கியவை. இந்தப் பாடல் கல்யாணி ராகத்தை அழகாக வெளிப்படுத்தியது.
மேலும், இன்னொரு சோகச் சிந்தனைக்கு நம்மை இழுத்துச் சென்ற கல்யாணி ராகப் பாடல் 'துணிந்த பின் மணமே', தேவதாஸ் படத்தில் கண்டசாலாவின் குரலில் ஒலித்தது. இதில் சாவித்திரி-நாகேஸ்வர ராவ் நடித்த சரத் சந்திரரின் நெஞ்சு உருக்கும் கதை பிரதிபலித்தது.
படம் தவப்புதல்வன் நினைவிருக்கிறதா? 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்' பாடல் இது ஒரு கல்யாணி ராகப் பாடலாகும்.
திருவருட்செல்வர் படத்தில் மறக்க முடியாத அம்சங்களில் ஒன்று அதன் இசை. அதில் ஒலித்த 'மன்னவன் வந்தானடி' பாடல், ஒரு கர்நாடக இசைக் கச்சேரிக்குத் தேவையான அத்தனை அயிட்டங்களும் கல்யாணி ராகத்தில் இசையமைக்கப்பட்டிருந்தது.
முக்கிய கல்யாணி ராகப் பாடல்கள்
கர்ணாடக ராகப் பாடல்களின் திரையுலக பயணம்
இந்த எடுத்துக்காட்டுகள் காட்டும் விதம், கர்ணாடக இசை ராகங்கள் பல கோணங்களில் தமிழ் சினிமாவை வலம் வந்துள்ளன என்பதை நம்மால் உணர முடிகிறது.
ராகங்கள் அடிப்படையிலான பிரபல பாடல்கள்
ராகங்களை சுரப்படுத்தினால் தான் அவற்றின் வேறுபாடுகள் புரியும். சில ராகங்கள் ஆற்றல் படைத்த இசை நுனுக்கர்களையும் தடுமாற வைப்பதுண்டு. உதாரணமாக பிருந்தாவன சாரங்கா என்கிற ராகம்.. முத்துசாமி தீட்சதர் இயற்றிய ஸ்ரீரஙபுர விகாரா என்கிற பாடல், அனைவரும் அறிந்த பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்தது.
கண்ணன், கிருஷ்னன் போன்ற தெய்வச் சித்தரிப்புக்கு இந்த ராகம் பிரபலமானது.
தமிழ் சினிமாக்களில் பிருந்தாவன சாரங்கா அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், எடுத்தாளப்பட்ட திரைப் பாடல்கள் அனைத்தும் பிரபலமாகப் பாடப்பட்டவை. மயக்கம் தரும் கற்பனை நயத்துடன் இன்பத் திளைப்பை உண்டாக்கும் இந்த ராகத்தில் அந்தக் காலப் படங்களின் பல பாடல்கள் இன்றும் நினைவில் நிற்பன.
'சின்ன சின்ன வீடு கட்டி என்ற மருமகள் [1953] திரைப் படப் பாடல் நீண்ட நாள் பாடப்பட்ட பிருந்தாவன சாரங்கா கீதம்.சி .ஆர் ..சுப்பராமன் இசை அமைத்திருந்தார்.
பூரண நிலவினிலே ராதை என்ற அதே ராகப் பாடல், 1947ல் வெளியான ராஜராஜேஸ்வரியில் ஒலித்தது.
மாப்பிள்ளை டோய் -மாப்பிள்ளை டோய் என்ற ஜன ரஞகமான பாடல் ஒன்றை பிருந்தாவன சாரங்காவில் தந்தை என்கிற படத்தில் பின்னொலிக்கச் செய்தவர் இசையாமைப்பாளர் எஸ்..ராஜேஸ்வர ராவ்.
சம்சாரம் என்ற ஜெமினியின் படம் 1951ல் வெளி வந்தது. அதில் ஒலித்த ஆராரோ ஆராரோ பாடல் இதே ராகத்தில் தான் அமைந்தது.
வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் எஸ்.வரலட்சுமி சிங்காரக் கண்ணே உன் என்கிற பாடலை பிருந்தாவன சாரங்காவில் தான் குழையக் குழைய பாடுவார்.. திரை ஜாம்பவான் ஜி.ரராமநாதன் இசை.
பொண் ஒன்று கண்டேன் என்ற படித்தால் மட்டும் போதுமா திரைப் பாடல், பூ வரையும் பூங் கொடியே என்ற பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் இரட்டையர் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையப்பில் வந்த கீதம், நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பூவும் பொட்டும் திரைப் பாடலும் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்தவை. அதில் நாதஸ்வர ஓசை பாடல் நெஞ்சினித்த கீதம்.
இது குழந்தை பாடும் தாலாட்டு என்ற பாடல் ஒரு தலை ராகம் படத்தில் 1980ல் எஸ்.பி.பாலசுப்ரமனியம் பாடுவார். முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ என்ற பாடல் யாராலும் மறக்க முடியாதது. கவிஞர் வாலியின் முதல் திரைப் பாடலான அதனை டி.எம்.எஸ்சும், சுசீலாவும் மென்மை தவழப் பாடி நம்மை மெய் மறக்கச் செய்தனர். இரட்டையர் இசை. இது பிருந்தாவன சாரங்காவின் சாரத்தைப் பிழிந்து தந்த சொக்க வைக்கும் திரைக் காணிக்கை.
இளையராஜா புதிய ராகம் படத்த்ல் ஒலித்த தெய்வங்கள் கண் பார்த்து பாடலும், இது நம்ம பூமி படப் பாடலான ஒரு போக்கிரி ராத்திரி பாடலும் பி.சாரங்கா ராக உருவாக்கங்கள்.
சிவரஞ்சனி,ரஞ்சனி, ஆனந்த பைரவி, கானடா, மத்யமாவதி போன்ற ராகங்கள் நம் இசையமைப்பாளர்கள் வழி தமிழ்த் திரையுலகில் ஆனந்தப் பிரவாகம் கண்டவை. அவற்றை விளக ஒரு தனி நூல் போட வேண்டும்.
நீந்களே நம்ப முடியாத அளவுக்கு சில ரகப் பாடல்களைக் குறிப்பிட்டுவிட்டு இக் கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.
மத்யமாவதி: மீனவ நண்பன் படத்தில் இசை இரட்டையர்கள்உருவாக்கிய ஒரு பாடல் - எம்ஜிஆர்-சரோஜாதேவிக்காக டி.எம்.எஸ் சுசீலா இணைந்து படிய பாடல் ...தொட்டால் பூ மலரும்... அதில் மத்யமாவதிச் சாயலை சுகமாக அனுபவிக்கலாம்.
'மலர்ந்து மலராகி'....பாசமலரில் ஒலித்த அற்புத கோஷ்டி கானம், முற்றிலும் ஆனந்த பைரவியில் அரங்கேறிய பாடம்!
இசைத்தமிழ் தமிழ் இசையின் மூன்று வகைகளுள் நடுநாயகமாக விளங்குவது. இது தமிழர் தம் வாழ்வில் பாலோடு இணைந்த தயிராக இடம்பெற்றுள்ளது. இது குழந்தை பிறந்தது முதல் இடம்பெறும் தாலாட்டு தொடங்கி இறப்பில் இடம்பெறும் ஒப்பாரி வரை, 'எங்கும் நான்!' என நீக்கமற நிறைந்திருக்கிறது.
எனினும் நாட்டுப்புறப் பாடல் வகைகளில் தென்படும் இசை, பக்திப்பாடல்களில் இலக்கியங்களில் தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றைய திரைப்படப்பாடல் வரை இடம்பெறும் இசைத்தமிழ் என எங்கும் நிறைந்து இருக்கிறது. இத்தகு இசைத்தமிழ் தமிழகத்தில் பெரும்பாலான அரசர்கள், ஆட்சியாளர்கள் போன்றோராலும் அவர்களது செல்லப்பிள்ளைபோல வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் இத்தகு இசைத்தமிழை முறைப்படி கற்றுத்தேர்வதும் அதில் புதிய படைப்புகளை உருவாக்குவதும் ஆய்வுகள் மேற்கொள்வதும் அத்துறை குறித்த கூடுதல் செய்திகளை நாம் அறிய வழி வகுக்கும்.
தமிழர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்தவர்கள். அவர்கள் திட்டமிட்டு முறைப்படி வாழ்ந்த அந்த ஐந்து நிலங்களிலும் இசைத்தமிழும் தனக்கென ஓரிடம் பெற்றுள்ளது. அத்தகு இசைத்தமிழ் தமிழின் தொன்மையோடு அன்று தொட்டு இன்றுவரை இணைந்து வந்துள்ளது. இது தமிழ் மொழிக்கும், தமிழர்க்கும் தனிப்பெருமை தருவது.
இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் LI60 விதமான இசையைப் தங்கள் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கிறார்கள். இவற்றோடு, தமிழிசைக்கும், தமிழர்கள் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லத்தில் இசைத்தமிழை ஒலிக்கவிடுவது, இசைத்தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, இசைத்தமிழைச் சீராட்டி மகிழ்வது எனப் L160 வகைகளில் இசைத்தமிழுடன் இசைந்த வாழ்க்கையை வாழ முற்பட வேண்டும்.
இப்படி செய்தால், தமிழ் இசைத் தொடர்ந்து வளரும் என்பது உறுதி.